Wednesday, August 5, 2020

கிருஷ்ண மகிமை

#கர்வம்

*ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார். 

அது சவுகந்தி என்ற மலரின் மணம். அவ்வகை மலர் குபேரனின் அழகாபுரி நந்தவனத்தில் மட்டுமே இருப்பது அவருக்குத் தெரியும்.

 அந்த சூழ்நிலையில் அவருக்கு தன் வாகனமான கருடனின் மீதும், தன் ஆயுதமான சக்கரத்தின் மீதும் கவனம் சென்றது.

 அவைகள் இரண்டும் நீண்டகாலமாகவே ஆணவம் கொண்டு ஆர்பாட்டம் செய்து வந்தன. பரமாத்வையே ஏற்றிச்செல்வதால் தானே உயர்ந்தவன் என்று கருடன் நினைத்தது.

 அதைப்போலவே சக்ராயுதமும் தான் இல்லையென்றால் பரமாத்மாவே செயல்பட முடியாது. என்னால்தான் பலரும் பரமாத்மாவைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்ற கர்வத்துடன் இருந்தது. 

கிருஷ்ணனுக்கு இவர்களின் தம்பட்டமும் கர்வமும் தெரிந்தே இருந்தது. தக்க சமயத்தில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டி பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார். 

இப்போது அவருக்கு அந்த சமயம் கிட்டிவிட்டது. இதைத்தான் நேரம் வருவது என்பார்கள்.*

*கிருஷ்ணன் கருடனை அழைத்து, கருடனே! குபேரனின் அழகாபுரி நந்தவனத்தில்  சவுகந்திகா மலர் உள்ளது.  அதனை இங்கு கொண்டு வா"

 என்று கூறினார். அதைக்கேட்டதும், இவ்வளவுதானா, ஒரே நொடியில் பறித்து வருகிறேன், என்று ஆர்ப்பரித்த கருடன், வேகமாகப் பறந்து அழகாபுரியிலுள்ள நந்தவனத்திற்கு சென்றது. 

அங்கு ஏராளமான மலர்கள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. கருடன் அம்மலர்களை ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டிருந்தது. 

அந்த சமயம் அனுமன் அங்கு வந்தான். யாரோ மலர்கள் கொய்வதைக் கண்டு,

 யார் மலர் பறிப்பது? 

என்ற அதட்டலுடன் கருடன் அருகில் வந்தான். கருடனும் அலட்சியமாக,

 என்னையே தெரியவில்லையா உனக்கு? நான் என்ன சாதாரண ஆளா? நான்தான் கருடன். பரமாத்மாவின் வாகனம்,

 என்றது. 

கருடனா? யார் அந்த பரமாத்மா? எனக்கு பரமாத்மாவையே தெரியாதே! இது குபேரனின் தோட்டம். இங்கு யாரும் மலர்களை பறிக்கக்கூடாது. போ, போ

 என அனுமன் விரட்டினான். 

ஓ! என்னையே விரட்டுகிறாயா? பரமாத்மாதான் இந்த மலர்களைக் கொண்டு வரச் சொன்னார். 

அவரின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியது என் கடமை. பரமாத்மா துவாரகையில் தான் இருக்கிறார்,

 என்றது கருடன். 

இதோ பார்! நீ யாராக இருந்தாலும் கவலையில்லை. மரியாதையாக வெளியே போ, 

என மேலும் அதட்டினான் அனுமன்.

 என்னையே விரட்டுகிறாயா? என் வலிமையைப் பார் 

என்று கருடன் கோபத்துடன் அனுமனைத் தாக்க முயன்றது. ஆனால் அனுமனோ, கருடனைப் பிடித்து இறுக்கி, தன் அக்குளுள் இறுக்கிக் கொண்டான்.

 கருடன் எவ்வளவோ முயன்றும் தன்னை விடுவித்துக் கொள்ள இயலவில்லை. அதற்கு மூச்சுத் திணறியது. என்னை விட்டுவிடு. பரமாத்மா சொன்னதால்தான் நான் வந்தேன் என்று கதறியது.

 சரி. உன்னை கிருஷ்ணன்தானே அனுப்பினார். அந்த கிருஷ்ணனையே கேட்கிறேன். வா போகலாம் என்று சொல்லியபடி துவாரகையை நோக்கி புறப்பட்டது.*

 *அனுமன் துவாரகைக்குள் நுழையும்போது, மக்கள் அதன் தோற்றத்தைக்கண்டு பயந்தனர்.

 அதனால் என்ன துன்பம் நேரிடுமோ என அஞ்சியவாறு கிருஷ்ணனிடம் சென்று சொல்லி முறையிட்டனர். கிருஷ்ணனுக்கு வருவது யாரென்று தெரியுமாதலால் மக்களிடம் அவர்,

 கவலைப்படாதீர்கள். சக்கராயுதத்தை அனுப்பி அவனை கொன்று விடுகிறேன்

 என ஆறுதல் கூறினான். சக்ராயுதத்தை அழைத்து, 

நீ சென்று நகரில் புகுந்த குரங்கு முகமும், மனித உடலும் கொண்ட ஒருவன் ஊருக்குள் வருகிறான். அவன் கையில், கருடன் சிக்கித் தவிக்கிறான்.

 அந்த வித்தியாசமான வடிவம் கொண்டவனை அழித்துவிட்டு கருடனை மீட்டு வா 

என்று ஆணையிட்டார். சக்கராயுதமும் மகா ஆவேசத்துடன் சுழன்று சென்றது. அனுமன் அருகில் சென்றதும், அதன் அக்குளில் கருடன் சிக்கி உயிர்போகும் நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தது. கருடனும், 

நல்ல நேரத்தில் வந்தாய். என்னை காப்பாற்று 

என சக்கராயுதத்தை கெஞ்சியது.ஆனால் அனுமன் மனதிற்குள் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே, சீறிவரும் சக்கராயுதத்தை பிடித்து தன்னுடைய இன்னொரு அக்குளுள் இடுக்கி வைத்தது.

 சக்கராயுதமும் பிடியில் திணறியபடி,

 நான் கிருஷ்ணரின் ஆயுதம். என்னை விட்டுவிடு 

என கெஞ்சியது.

அட நீயும் கிருஷ்ணனின் ஆள்தானா? எனக்கு தெரிந்தது ராமன் மட்டுமே. அவரைவிட சக்தி வாய்ந்தவர் எவருமில்லை.

 நீங்கள் கூறும் அந்த கிருஷ்ணனை பார்க்கலாம் 

என்றபடி பிடியை மேலும் இறுக்கினான். அனுமனின் பிடியில் சிக்கிய சக்கராயுதமும், கருடனும் இதுவரை கொண்டிருந்த ஆணவத்தை விட்டன.*

*அனுமன் கிருஷ்ணன் முன் சென்றான். அவனுக்கு கிருஷ்ணன் யாரென்று தெரியவில்லை.

 நீ யார், என்றான்.

அதற்கு மேல் சோதிக்க விரும்பாத கிருஷ்ணன் அனுமனின் பார்வையில் ராமனாக காட்சி தந்தார். 

பிரபோ! தங்கள் தரிசனத்திற்காகத்தானே காத்து கிடந்தேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறி வணங்கினான்.*

*அனுமனை கிருஷ்ணனும் வாழ்த்தி,

 வாயு மைந்தா! உன் அக்குளுள் ஏதோ வைத்திருக்கிறாயே. அது என்ன? 

என்று கேட்டார்.

 பிரபோ! தங்களுக்கு சவுகந்திகா மலர் வேண்டுமானா

ல் என்னிடம் சொல்லியிருக்கலாமே! உங்கள் வாகனம் கருடனாம்!தோட்டத்தில் புகுந்து நாசம் செய்து கொண்டிருந்தது. அதனால் அதனை பிடித்து வைத்துக் கொண்டேன்.

 தங்களைக் கண்டு முறையிட வந்துகொண்டிருக்கும்போது என்னை வழிமறித்து வம்பு செய்தது இந்த சின்ன சக்கரம். அதனால் அதையும் பிடித்து அக்குளுள் வைத்தேன், என கூறினான்.

ஆஞ்சநேயா! பாவம் அவர்களை விட்டுவிடு 

என கிருஷ்ணன் கூற, அனுமன் அவர்களை அக்குளில் இருந்து விடுவித்தான். 

கருடனும் சக்கரமும் தலைகுனிந்தபடியே, மாதவா! எங்களை மன்னித்தருள்க. எங்கள் ஆணவம் அழிந்தது என வேண்டினர். 

கிருஷ்ணரும் புன்னகை புரிந்தார்.*

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..

அன்பான இனிய வியாழன் கிழமை காலை வணக்கம்..

Tuesday, August 4, 2020

ஆசையின் அளவு

💦  💦  💦  💦  💦 💦  💦

*ஆசையின் அளவு...?*

ஒரு மனிதனின் மகிழ்ச்சியைக் 
காண விரும்பிய கடவுள் அவன்
முன்னே தோன்றி..!

“உனக்கு என்ன
வேண்டும்?” என்று கேட்டார்.

“பணம், செல்வம், தங்கம், வைரம்!”
என்றான் மனிதன் ஆசையோடு.

கடவுள் வலது கையின்
சுட்டுவிரலை நீட்டினார்..

அங்கிருந்த பீரோ தங்கமானது.!

ஆனால் மனிதன் பேசாமல் இருந்தான்.

கடவுள் மறுபடி விரலை நீட்ட,
அங்கிருந்த மேடை தங்கமானது.

அவன் பேசாமல் இருந்தான்,

கடவுள் வேக வேகமாக அந்த
அறையில் உள்ள
பொருட்களை எல்லாம்
தங்கமாக்கினார்..

அப்போதும் மனிதன் சிரிக்கவில்லை.

சோர்ந்து போன கடவுள் மனிதனிடம்
கேட்டார்.

“இன்னும் உனக்கு என்ன வேண்டும்?”
என்று.

“அந்த விரல் வேண்டும்” என்றான்
மனிதன்.

கடவுள் மயங்கி விழுந்தார்.
😔😔😔😔😊😊😊😊😊

Monday, August 3, 2020

அபூர்வ 27 குறிப்புகளை சித்தர்களின் குரலில்


🌹🌹 *#சக்தி #வாய்ந்த, #உடனே #பலன் #தரும் #பரிகாரங்கள்🌹 பற்றிய அபூர்வ 27  குறிப்புகளை சித்தர்களின் குரலில் இன்று உலகம் அறிய பகிர்கிறேன்....*

(1) வீட்டு பூஜை அறை எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்... 

(2)சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

(3) இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ] இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி , தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள். குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

(4) கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

(5) ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி , திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

(6) ஆலய திரிசூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

(7) வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

(8) சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

(9)  கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

(10) ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

(11) வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு , அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

(12) பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

(13) மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

(14) கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

(15) வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

(16) சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

(17)  இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

(18) செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

(19) விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

(20) ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

(21) பஞ்சகவ்ய கலவையை வ

ாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க , தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

(22) புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

(23) வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

(24) பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

(25) வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

(26) தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

(27)  எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்...

வாழ்க வளமுடன்...

கஞ்சமலை ( தங்க மலை ) ரகசியங்கள்

Padmavathi Chairmadurai:
கஞ்சமலை ( தங்க மலை ) ரகசியங்கள் !!! 
-----------------------------------------------------

💥🧥கஞ்சமலை , இது ஒர் அதிசயமலை !! பலருக்கும் தெரியாத ஒரு மலை !! சித்தர்கள் வாழ்ந்த மலை !! இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை !!.

🧥💥கஞ்சமலை என்பது  சேலம் மாவட்டத்தின் , சேர்வராயன் மலைத்தொடரை சார்ந்த ஒன்றாகும் !! . 

🕉️🏵️சேலம் மாவடத்திலுள்ள சின்னசீரகபாடி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மலை , அதிகம் சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது !!

🕉️🏵️இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது !! 

🧥🩸இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும் !! இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மையானவர்களான திருமூலர், காலங்கிநாதர், அகத்தியர், கோரக்கர் ஆகியோர் வாழ்ந்த மலையாகும் !! 
 
🌹🌞மேலும் இது பல சிறப்புகளையுடையதாகும்  !!!

🤟🏼🌛🌜பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் ,  வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும் !! கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர் !!  

🌞🤟🏼கஞ்சமலையின் மேல் மலையில் , அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது !! 

🌞🤟🏼இன்றும் சித்தர்களின் அருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் !! 

🧥👥கஞ்சமலையின் பெய.ர்க் காரணம் சற்று கவனிக்கத் தக்கதாகும். கஞ்சம் என்பது தங்கம், இரும்பு, தாமரை எனும் மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம் !! 

🧥✋மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம் !! 

💠💦இவை அனைத்திற்கும் மேலாக , வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் , இம்மலையில் தங்கம் கிடைத்தது என்பதுதான் !! 

💠💦கஞ்சமலையிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது !! 

⛩🛐அக்காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலையினை மையமாக வைத்து , கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே வெள்ளியங்கிரியையும், வடக்கே பெரும் பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்கு மண்டலமாகும் !! 

⛩🛐சேலம், செவ்வாய்ப்பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியாபட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும் !!.

🍁*பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ்செய்

சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச்செறும்பொன்

முற்றிலுந் தன்னகத்தேவிளை வாவதை மொய்ம்பிறையுள்

மற்றும் புகழக்கொடுத்த தன்றோ கொங்கு மண்டலமே.*🍁

🍁(கொங்கு மண்டலச்சதகம் - கார்மேகக்கவிஞர்) !! 

🕉️இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது !! அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன்நதி , பொன்னிநதி என்று அழைக்கின்றனர் !!. 

🌹👩‍👦அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது !! 

🩸🍄தங்கம் மட்டுமல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு காயகல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்சமலைக் காட்டினைக் கருங்காடு என்றும் கூறுவர் !!  

🌞🔔அதியமான் அவ்வைக்குத் தந்த கருநெல்லிக்கனி ,  கஞ்சமலையில் விளைந்த கருநெல்லிக்கனியே ஆகும் !! 

💠💧இந்த அதியமான் ஆண்ட  தலைநகரம் தான் தகடூர் ( இன்றைய தருமபுரி .சேலத்தின் அருகில் உள்ள ஊர் ) !! . இன்றும் தருமபுரி சேலம் சாலையில் அதியமான் கோட்டை என்ற ஊர் அதே பேரிலேயே உள்ளது ... .... !! 

💧💦அங்கே கோட்டையையும் இன்றும்  காணலாம்  !! இங்கே அதியமான் மன்னன் வணங்கிய கால பைரவர் கோவில் இன்றும் கூட மிக பிரசித்திமாக உள்ளது !! 

🏯🙏அஷ்டமி தினத்தன்று கோவிலில் கூட்டம் அலைமோதும் . இது பெங்களூர் போகும் வழித்தடத்தில் உள்ளதால் கர்நாடகா மற்றும் பெங்களூரிலுருந்து ஏராளமான பேர் வருகின்றனர் !! 

🧥⛩கஞ்சமலையில் தங்கத்தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் இரசவாதம் செய்துள்ளனர். சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும் !!  

🧥⛩சேலம் பகுதி மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் .. அதனால் இன்று சேலத்தில் பத்தடிக்கு ஒரு நகை கடையைக் காணலாம் . தங்க நகை கடைகள் சேலத்தில் அதிக அளவு பரவி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் !! 

💥🌞தங்கம் வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால் கைதேர்ந்த இரசவாதியாகிய சித்தர் அருளால் தேவையான அளவு தங்கம் பெறலாம் !! 

🩸🌹பலரும் கொல்லிமலை, கல்வராயன்மலை, பர்வதமலை, பொதிகைமலை, சது

ரகிரி என பல மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள், ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூறவில்லை !! 

🔱🌞காலங்கிநாதரின் குருபக்தியை திருமூலர் கண்டது இந்தமலையில் தான் !! அவ்வையாருக்கு அதியமான் நெல்லிகனி கொடுத்ததும் இங்கு தான் !! 

🔱💠அது விளைந்த இடமும் , இங்கு தான் அங்கவை, சங்கவை திருமணம் நடந்ததும், அகத்தியர் இங்கிருந்துதான்  பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், அவரே குறிப்பிடுகிறார் !! 

⚜️🌕சிவபெருமான் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும் !! 

🔱👁சுலுமுனை சித்தர் குகை, அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது !

⚜️🔱கஞ்சமலைசித்தர்   கஞ்சமலையில்   பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார் !! 

⚜️🔱இவர்அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர் !!. இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்கு பிரியமானவர் !!

Sunday, August 2, 2020

இன்றைய குறள்

*அன்பு நண்பர்களே! இனிய காலை வணக்கம்!*🙏🙏🙏

*குறள் 725:*

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

*கலைஞர் மு.கருணாநிதி  உரை:*

அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

*மு.வரதராசனார்  உரை:*

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

*சாலமன் பாப்பையா உரை:*

பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

*பரிமேலழகர் உரை:*

ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.).

*மணக்குடவர் உரை:*

அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

*Translation:*

By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.

*Explanation:*

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).

☘️🍀🌴☘️🌷🍀🌴☘️🍀🌴☘️

*இந்த நாள் மிக உன்னதமான நாள்!*👌🌹🌺💐🌷🌴 *வாழ்க வளமுடன்!*👍🤝🌻🌳🌿☘️🍀🌴

இன்றைய ஹோரை

திங்கள் ஓரைகளின் காலம்*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
காலை 🔔🔔✅

6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅
 7-8.   சனி        ❤👈அசுபம் ❌
 8-9. குரு.          💚   👈சுபம்   ✅
 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
 10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. புதன்.     💚   👈சுபம்  ✅
 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 2-3. சனி        ❤👈அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4. குரு.          💚   👈சுபம்   ✅
 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன்

*மிகவும் அருமையான பதிவு.*
*கற்பனை செய்து படிக்கவும்*

மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன.

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.

சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.

பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.

இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.

இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.

நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.

நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.

ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

(ஆதாரம்: பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம், ஸ்ரீமத் மகாபாரதம் முதலிய நூல்கள்.)

*தொகுப்பு* :
*ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்*
  🦅 *சர்வம்🌎 விஷ்ணு மயம்* 👈

திருப்பதி லட்டுக்கு வயது-"305”

🌹வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 2 திருப்பதி லட்டுக்கு வயது-"305”
1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.🌹 


இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. துவக்கத்தில் பக்தர்களுக்கு பூந்தியாக இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது 1803 முதல் லட்டு வடிவில் விலைக்கு விற்கும் நடைமுறை அமலானது. அப்போது அதன் விலை காலணா மட்டுமே.

கஷாயம் வாரம்


*# திங்கட்கிழமை:*
வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

*#செவ்வாய்க்கிழமை:*
கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

*# புதன்கிழமை:*
தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

*# விழயாகிழமை:*
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

*# வெள்ளிக்கிழமை:*
வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

*# சனிக்கிழமை:*
முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

*# ஞாயிற்றுக்கிழமை:*
சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Saturday, August 1, 2020

இன்றைய சிந்தனை

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*வாழ்வின் சாரம்..!!*

மனம் ஒரு ஏணியாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நீங்கள் அற்பமான கீழ்நிலைக்குப் போகலாம் அல்லது உன்னதமான மேல் நிலையை எட்டலாம். இந்த ஏணி தவிர்த்து ஒதுக்கி விட முடியாத ஒன்று. நீங்கள் மனதின் எஜமானராக மாறினால் தான் ஏணி வழியாக சென்று மேல்நிலை எய்த இயலும். மனதின் சேவகனாக நீங்கள் இருந்தால் கீழ்மட்ட அடிநிலைக்குத்தான் போவீர்கள். 

மனதுக்குச் சேவகனாக இருப்பது ஆபத்தான விஷயம். நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்பதுடன் அது முடிந்து போவதில்லை. 

மனதில் குழப்பமும் சந்தடியும் நிறைந்து கிடக்கின்றன. அது உங்களை கோபப்படச் சொல்லி உத்தரவு போடும். மறுகணமே கோபப்பட்டதை எண்ணி வருத்தபடு என்று  அதிகாரம் செய்யும். உலகை ரசித்து அனுபவி என்று ஒரு எண்ணம் கூறும். இன்னொரு எண்ணம் சகலத்தையும் துறந்துவிடு என்று எடுத்துரைக்கும். 

திருடினாலும் தப்பில்லை எப்படியாவது பணம் சேர்த்துக் கொள் என்று மனம் அறிவுரை சொல்லும். அது பாவச் செயல் என்று மற்றொரு எண்ணம் மனதில் எழும். இவ்வாறு மனதில் எழும் எண்ணங்களுக்கு கணக்கே இருக்காது. இந்த அனைத்து எண்ணங்களின் ஒட்டுமொத்த வடிவம்தான் மனமாகும். 

உங்கள் புத்தி ஏதாவது ஒரு விஷயத்தில் சென்றால் மனம் அமைதியான நிலையில் இருக்கும். மனதில் அதற்கு வழியில்லை. அங்கே எண்ணக் குவியல்கள் மண்டிக் கிடக்கின்றன. சந்தைக்கடை போல அது கசப்பானதாகவே இருக்கிறது. 

மனம் பள்ளியின் வகுப்பறை போன்றது எனலாம்.ஆசிரியர் அங்கே இருக்கும் வரை மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து பாடம் படிப்பார்கள். அங்கே அமைதி நிலவும். ஆசிரியர் எழுந்து அப்பால் போனதும் சகலமும் கட்டவிழ்த்து போய்விடும். சண்டைகள் நடக்கும். புத்தகங்கள் தரையில் வீசப்படும். சிலேட்டுகள் உடைபடும். மேஜைகள் தலைகீழாகக் கவிழும். கரும்பலகையில் கண்டபடி கிறுக்கி வைக்கப்படும். 

இப்போது மாணவர்களைக் கட்டுபடுத்த அங்கே யாரும் கிடையாது. அவர்களை மேற்பார்வை செய்ய ஆளில்லை. ஆசிரியர் திரும்பி வந்ததும் வகுப்பறையில் பரிபூரண அமைதி ஏற்படுகிறது. புத்தகங்கள் பழைய 
இடத்துக்குத் திரும்பி விடுகிறது. எல்லோருடைய பார்வையும் தரைநோக்கித் தாழ்கிறது. மீண்டும் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள். 

நீங்கள் எஜமானனாக மாறும் போது மனம் சேவகனாக மாறி அடங்கி நடக்கத் துவங்கி விடும். நீங்கள் உங்கள் அதிகாரத்தை இழக்கும் போது மனம் அடங்காப்பிடாரியாக மாறி விடுகிறது. அதன் ஒழுங்கீனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அங்கே ஒன்றல்ல...பல கணக்கற்ற குரல்கள் ஒலிக்கும். அவை உங்களை எந்த இடத்திற்கும் அழைத்துச் சென்றிட இயலாது. 

மனிதன் பலதரப்பட்ட எண்ணங்களில் வசப்பட்டவன் என்று மகாவீரர் கூறுகிறார். மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. இதை நவீன மனோதத்துவ இயலும் ஒப்புக் கொள்கிறது. மனிதனுக்குப் பல எண்ணங்கள் ஒரே சமயத்தில் உதிக்கின்றன என்பதை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது. 

உங்களுக்கு இருப்பது ஒற்றைச் சிந்தனை அல்ல. கணக்கற்ற எண்ணங்கள் உள்ளே ஓடுகின்றன. அது ஒரு வேலைக்காரனுக்கு ஆயிரம் எஜமானர்கள் இருப்பது போன்றதாகும். ஒவ்வொரு எஜமானரும் ஒவ்வொரு உத்தரவு போடுவார். யார் பேச்சை நான் கேட்பது?என்று வேலைக்காரனுக்கு பைத்தியம் பிடித்து விடும். அந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள். 

எனவே ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்யுங்கள். அப்போது ஆசிரியர் திரும்பி வந்தது போலாகி விடும். வேலைக்காரர்கள் பலர் இருந்தாலும் ஒவ்வொருவரையும் அவரவர் இடத்தில் வையுங்கள். எஜமான் ஒருவனாக இருக்கும் போது நீங்கள் செல்லவேண்டிய வாழ்க்கை திசை தென்பட்டு விடும். 

வாழ்வின் சாரத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் யார் என்பதை..
உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

*💗வாழ்க வளமுடன்💗*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி (ரகசியம்) தெரியுமா?

*நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி (ரகசியம்) தெரியுமா?*

*(மகா மந்திர போதிணி என்ற அபூர்வ நூலில் நான் படித்த விடயங்களை இன்று நம் திருமந்திர Blogger அன்பர்கள்  அறிந்து பயன் பெற பகிர்கிறேன்....*)

நம் பாதங்களில் வசிப்பவள் *ஆதிலஷ்மி.*

நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் *சிவ சிவ* எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் *ஆதிலஷ்மி* நம்மை விட்டு விலகி விடுவாள்.

நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் *கஜலஷ்மி.*

காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும்
நெல் .. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு *கஜலட்சுமி* விலகுகிறாள்..!!

நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் *வீர்யலஷ்மி..!!*
 வசிக்கிறாள். 

பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த *வீர்யலஷ்மி* விலகுகிறாள்.

நம் இடது தொடையில் வசிப்பவள் *விஜயலஷ்மி.*

 இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம். எனவே
மனைவியை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த *விஜயலக்ஷ்மி* விலகி விடுவாள்.!!

வலது தொடையில் வசிப்பவள் *சந்தானலஷ்மி...!*

பெற்றோர்கள்  கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும்.
இடது தொடையிலோ .. இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த *சந்தானலஷ்மி* விலகி விடுவாள்...!!

நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் *தான்யலஷ்மி...!*

எச்சில் உணவு... ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக் களுக்கோ .. பிறருக்கோ கொடுத்தால் *தான்ய லட்சுமி* விலகி விடுவாள்.

நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் *தைரியலஷ்மி..!!*

நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கொடுப்பவர்களை விட்டு *தைரிய லட்சுமி* விலகுகிறாள்.

நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் *வித்யாலஷ்மி...!!*

கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும் .. பூணூல்... தாலி... என குடும்ப பராம்பரிய சின்னத்தை 
 அணியாதவர்களை விட்டு *வித்யா லட்சுமி* விலகுகிறாள்.

நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் *செளபாக்யலஷ்மி.!!*

இவள் நம் புருவத்தை சிரைப்பதாலும் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும்  , வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் வீபூதி . நாமம் .. அணியாவிட்டாலும் நம்மை விட்டு *சௌபாக்ய லட்சுமி* விலகுகிறாள்..

*பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மி களை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.?*
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

பிரதோஷ வேளையில், சிவனாரை நினைத்து வழிபடுங்கள்

🚩🕉️🔯🔱🔱🔱🔯🕉️🚩
*பிரதோஷம்,* 
*சனி_பிரதோஷம்;*
*பாவம்_போக்கும்*
*பிரதோஷம்*
    பிரதோஷம் விசேஷம். அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் இன்னும் விசேஷம். இன்றைய தினம்  
 சனிபிரதோஷம். பிரதோஷ வேளையில், சிவனாரை நினைத்து வழிபடுங்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கியருள்வார் ஈசன்.

மாதந்தோறும் பிரதோஷம் வரும். திரயோதசி என்பதே பிரதோஷம். அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாகவும் வருவதே திரயோதசி. அதுவே பிரதோஷம். ஆக மாதத்துக்கு இரண்டு பிரதோஷம் உண்டு.

ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் சிவனாரை, திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், சிவபதம் கிடைக்கும். இம்மையிலும் மறுமையிலும் நல்ல நிலையை அடையலாம் என்பார்கள்.

இதேபோல், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம்.

எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இதேபோல், இன்னும் இன்னுமான மகத்துவங்களைக் கொண்டது சனிக்கிழமையில் வரும் பிரதோஷம். சனிப்பிரதோஷம் சர்வ பாவவிமோசனம் என்பார்கள். நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் உட்பட சகல பாவங்களையும் போக்குவார். புண்ணியம் செய்த பலன்களை வழங்குவார் ஈசன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மேலும் சனிப்பிரதோஷ சிவ தரிசனமும் சிவ வழிபாடும் விரதமும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கவல்லவை என்பது ஐதீகம். கிரகங்களால் உண்டான கெடுதல்கள் நீங்கப் பெறலாம். இல்லத்தில் இதுவரை கிழக்கும் மேற்குமாக இருந்த தம்பதி சனிபிரதோஷ வழிபாட்டால், சிவபார்வதியைப் போல் ஐக்கியமாகிவிடுவார்கள். கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது உறுதி.

ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் ரொம்பவே விசேஷம். அம்பாள் வழிபாடுகளைப் பார்த்து சிவனாரை ஆச்சரியப்படுவாராம். அப்படியிருக்க, தன் கணவரை தென்னாடுடைய சிவனாரை மகிழ்விக்க, அவரிடம் இருந்து வரங்களைப் பெற, உமையவளே பிரதோஷ பூஜைகள் செய்தாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.  இன்று18ம் தேதி பிரதோஷம். ஆடிப் பிரதோஷம். சனிப் பிரதோஷம்.அற்புதமான இந்தநாளில், சிவனாரை வணங்குவோம். பசுக்களுக்கு உணவளிப்போம். பிரதோஷ பூஜை வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றுங்கள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு, அபிஷேகத்துக்கு பொருட்கள் வழங்குங்கள். முடிந்தால், வில்வம் கிடைத்தால் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தக் கொடுங்கள்.

இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருள்வார் சிவனார். சனிப்பிரதோஷ நாளில், அப்பன் சிவனை வணங்குவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்

*ஆடியில் தினம் ஓர் மாரியம்மன் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்* 

   *🌿குலம் காப்பவளாம் மகமாயி🌿*

*பகிர்வு-சிவசிவ அன்பேசிவம்*

*🌿திருவப்பூர் முத்துமாரியம்மன்🌿*

*கோயில் பற்றி பார்ப்போம்*

 *💥🌻 இவ்வாலயத்தின் கருவறையில் முத்துமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.கோயிலின் திருச்சுற்றில் மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியின் சிலைகள் உள்ளன.*

 *💥🌻அன்னை முத்துமாரி இப்புண்ணிய பூமியில் தோன்றியப் பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்பினார். தக்கதொரு பக்தன் மூலம் வெளிவரக்காத்திருந்தார்.அன்னையின் திருவிளையாடலின்படி  வேட அடியார்களாகிய கருப்பன், சுப்பன், காத்தமுத்து ஆகியோர் முன் உடும்பு உருவத்தில் காணப்பட்டார். தக்கதொரு வேட்டைப்பொருள் வாய்த்தது எனக்கருதி வேட அடியார்கள் உடும்பைப் பிடிக்க முயன்றனர். மறைந்து மறைந்து உடும்பு ஓட வேட அடியார்களும் பின்தொடர்ந்து ஓடினர். தொடர்ந்து ஓடிய உடும்பு அடர்ந்த காடுகளில் வெகுதூரம் ஓடி, வேடர்களின் கண்ணுக்கு தெரிந்த நிலையில் ஒரு பொந்துக்குள் புகுந்தது. அன்னை புண்ணிய பூமியில் தோன்றக் காத்திருந்து இடத்திலேயே அந்தப்பொந்து இருந்தது.* 

*💥🌻இந்த இடம் அக்காலத்தில் காளிக்கோட்டை என்ற பெயரில் வழங்கி வந்தது. இந்த இடத்திலிருந்து கோட்டைப் பிற்காலத்தில் தொண்டைமான்களின் போரின்போது இடித்து அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கவினாட்டு கண்மாயில் நடைபெற்ற பல போர்களை வரலாறு தெரிவிக்கிறது. அருள்வாக்குப்படி அன்னையின் திருவுருவச்சிலையை தங்களது இருப்பிடப்பகுதி நோக்கி சுமந்து வந்தனர். அன்னைக்குப் பிடித்தமான இடம் வந்தபோது இறக்கி வைக்க நேர்ந்தது. இந்த இடமே தனக்கு உகந்தது என அன்னை தெரிவித்தார். அந்த இடம்தான் இன்று அன்னை எழுந்தருளியுள்ள திருவப்பூர் ஆகும்.*

*💥🌻 இந்நிகழ்ச்சி கிபி 1732 ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்றதாகும். கண்கண்ட தெய்வமாம் அன்னை முத்துமாரியை தக்கதொரு கட்டிடத்தில் அமர்த்த இயலாத நிலை வேட அடியார்களோ அன்றைய பசியை போக்க காடு, மேடு அலைந்து காய், கனிகளையும் இலை, கிழங்குகளையும், வேட்டைப்பொருள்கள் மூலமாக உணவு தேட வேண்டிய நிலை. இந்நிலையில் கட்டிடம் கட்ட பொன், பொருளேது. பக்தர் நிலையறிந்து அன்னையவள் பச்சை இலைக்கூடாரம் அமைத்து பராமரிக்க கூறினார்.*

*💥🌻புதுக்கோட்டை திருக்கோயில்களை சார்ந்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் புதுகை மன்னர்கள் பிரதானமாக வழிபடும் கோவில் ஆகும்.*

*இக்கோயிலுக்கு காலம் காலமாக சட்டத்தேரில் பவனி வந்த அம்பாளுக்கு திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் அறக்கட்டளை மற்றும் திருவப்பூர் கவிநாடு கிராமத்தார்களின் பெரும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று வைரத்தேர் (மரத்தேர்) செய்யப்பட்டு கடந்த 24.2.2009ல் வெள்ளோட்டம் விடப்பட்டது.*

*💥🌻திருவப்பூர் முத்துமாரி அம்பாளுக்கு தங்கத்தில் தாலி, மூலஸ்தான கோபுர தங்க கலசம் அத்துடன் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய தாய் நிலை கதவு, முகப்பு மண்டபம், முகப்பு விமானம், கோபுர வர்ணங்கள், எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக 29.1.2010 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.* 

 
*🙏நன்றி

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்கூறும் அறிவுரைகள்

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்
கூறும் 
அறிவுரைகள்.....

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.

(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)

3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.

(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) 

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....

(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...

(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....

(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
---------------------

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!

► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. 

ஓடுவது முள் அல்ல..! 
நம் வாழ்க்கை...

 . . . . . .......படித்ததில் பிடித்தது!

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் !

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் ! 

2.8.20

- ஸ்ரீரங்கநாதர் சீர்வரிசை !

ஆடிப்பெருக்கு ஆடி 18 அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறையை அடைவார்.

சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலையில் திருமணம் நடந்து கொண்டிருந்த வேளை... அப்போது தென்திசைக்குச் செல்லுமாறு பணிக்கப்படுகிறார் அகத்திய பெருமான்.

அகத்தியருக்கு ஆசி வழங்கி அவரைத் தென் திசைக்கு அனுப்பும்போது தன் கரங்களில் தவழ்ந்திருக்கும் மலர் மாலை ஒன்றை அவருக்கு வழங்குகிறாள் பார்வதிதேவி. அந்த மாலை ஒரு இளம்பெண் ணாக உருமாறுகிறது. தவசீலரான அகத்தியர் அவளைத் தன் கமண்டலத்துக்குள் அடக்கி விடுகிறார்.

குடகில் தவம் இருந்தபோது கமண்டலம் சரிந்து, நீர் ஓடியதல்லவா? கமண்டலத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த பெண்ணே காவிரி என்னும் நதியாகிப் பெருகி ஓடினாளாம். எனவே, காவிரி என்பவளும் பார்வதிதேவியின் ஓர் அம்சமே. அதாவது, சிவபெருமானின் தேவி என்றும் சொல்வர்.

இந்தக் கதைப்படி பார்த்தால், மகாவிஷ்ணுவுக்குத் தங்கை முறை காவிரி. பார்வதி தேவி தங்கை என்றால், அவள் வடிவான காவிரியும் தங்கைதானே!எனவேதான் தன் அண்ணனை வணங்கும் விதமாக மாலவன் ஸ்ரீரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி. மலர் மாலையில் இருந்து பிறந்தவள்தானே காவிரி! 

ஸ்ரீரங்கம் என்பது ஒரு தீவு. காவிரியும் அதன் உப நதியான கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் பார்க்கிறோம். தங்கையான காவிரியே தன்னை மலர்மாலை போல் சூழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் அண்ணனான ரங்கநாதருக்கும் காவிரியின் மேல் அதீத பாசம்.

வருடத்தின் சில விழாக்களில் இந்தப் பாசத்தை ஸ்ரீரங்கநாதரே வெளிப்படுத்துவார். அதில் ஒன்று - இந்த ஆடிப்பெருக்கு. ஆடிப்பெருக்கு அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறையை அடைவார். உறவினர்கள் வீடுகளுக்குப் போனால் அவர்களது முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருப்போம், அல்லவா? அதுபோல் பாச மிகுதியால் தன் தங்கையான காவிரியைப் பார்த்தபடி நம்பெருமாள் அமர்ந்திருப்பார். போன சூட்டோடு உடனே கிளம்பி விட மாட்டார். மாலை வரை அதே இடத்திலேயே நம்பெருமாள் காணப்படுவார்.

காலையில் இவருக்கு காவிரிப் படித்துறையில் திருமஞ்சனம் நடைபெறும். வருகின்ற பக்தர்கள் அனைவரும் அண்ணனையும், தங்கையையும் வணங்குவார்கள். திருமஞ்சனம் முடிந்த பின்னர் யானை மேல் வைத்து எடுத்து வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை மாலை வேளையில் காவிரிக்கு அர்ப்பணம் செய்வார் ஸ்ரீரங்கநாதர்.
 இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வார். 

இந்த விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும் என்பர்.🙏🌹🌈

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...