Padmavathi Chairmadurai:
-----------------------------------------------------
💥🧥கஞ்சமலை , இது ஒர் அதிசயமலை !! பலருக்கும் தெரியாத ஒரு மலை !! சித்தர்கள் வாழ்ந்த மலை !! இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை !!.
🧥💥கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தின் , சேர்வராயன் மலைத்தொடரை சார்ந்த ஒன்றாகும் !! .
🕉️🏵️சேலம் மாவடத்திலுள்ள சின்னசீரகபாடி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மலை , அதிகம் சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது !!
🕉️🏵️இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது !!
🧥🩸இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும் !! இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மையானவர்களான திருமூலர், காலங்கிநாதர், அகத்தியர், கோரக்கர் ஆகியோர் வாழ்ந்த மலையாகும் !!
🌹🌞மேலும் இது பல சிறப்புகளையுடையதாகும் !!!
🤟🏼🌛🌜பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் , வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும் !! கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர் !!
🌞🤟🏼கஞ்சமலையின் மேல் மலையில் , அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது !!
🌞🤟🏼இன்றும் சித்தர்களின் அருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் !!
🧥👥கஞ்சமலையின் பெய.ர்க் காரணம் சற்று கவனிக்கத் தக்கதாகும். கஞ்சம் என்பது தங்கம், இரும்பு, தாமரை எனும் மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம் !!
🧥✋மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம் !!
💠💦இவை அனைத்திற்கும் மேலாக , வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் , இம்மலையில் தங்கம் கிடைத்தது என்பதுதான் !!
💠💦கஞ்சமலையிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது !!
⛩🛐அக்காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலையினை மையமாக வைத்து , கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே வெள்ளியங்கிரியையும், வடக்கே பெரும் பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்கு மண்டலமாகும் !!
⛩🛐சேலம், செவ்வாய்ப்பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியாபட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும் !!.
🍁*பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ்செய்
சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச்செறும்பொன்
முற்றிலுந் தன்னகத்தேவிளை வாவதை மொய்ம்பிறையுள்
மற்றும் புகழக்கொடுத்த தன்றோ கொங்கு மண்டலமே.*🍁
🍁(கொங்கு மண்டலச்சதகம் - கார்மேகக்கவிஞர்) !!
🕉️இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது !! அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன்நதி , பொன்னிநதி என்று அழைக்கின்றனர் !!.
🌹👩👦அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது !!
🩸🍄தங்கம் மட்டுமல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு காயகல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்சமலைக் காட்டினைக் கருங்காடு என்றும் கூறுவர் !!
🌞🔔அதியமான் அவ்வைக்குத் தந்த கருநெல்லிக்கனி , கஞ்சமலையில் விளைந்த கருநெல்லிக்கனியே ஆகும் !!
💠💧இந்த அதியமான் ஆண்ட தலைநகரம் தான் தகடூர் ( இன்றைய தருமபுரி .சேலத்தின் அருகில் உள்ள ஊர் ) !! . இன்றும் தருமபுரி சேலம் சாலையில் அதியமான் கோட்டை என்ற ஊர் அதே பேரிலேயே உள்ளது ... .... !!
💧💦அங்கே கோட்டையையும் இன்றும் காணலாம் !! இங்கே அதியமான் மன்னன் வணங்கிய கால பைரவர் கோவில் இன்றும் கூட மிக பிரசித்திமாக உள்ளது !!
🏯🙏அஷ்டமி தினத்தன்று கோவிலில் கூட்டம் அலைமோதும் . இது பெங்களூர் போகும் வழித்தடத்தில் உள்ளதால் கர்நாடகா மற்றும் பெங்களூரிலுருந்து ஏராளமான பேர் வருகின்றனர் !!
🧥⛩கஞ்சமலையில் தங்கத்தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் இரசவாதம் செய்துள்ளனர். சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும் !!
🧥⛩சேலம் பகுதி மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் .. அதனால் இன்று சேலத்தில் பத்தடிக்கு ஒரு நகை கடையைக் காணலாம் . தங்க நகை கடைகள் சேலத்தில் அதிக அளவு பரவி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் !!
💥🌞தங்கம் வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால் கைதேர்ந்த இரசவாதியாகிய சித்தர் அருளால் தேவையான அளவு தங்கம் பெறலாம் !!
🩸🌹பலரும் கொல்லிமலை, கல்வராயன்மலை, பர்வதமலை, பொதிகைமலை, சது
ரகிரி என பல மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள், ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூறவில்லை !!
🔱🌞காலங்கிநாதரின் குருபக்தியை திருமூலர் கண்டது இந்தமலையில் தான் !! அவ்வையாருக்கு அதியமான் நெல்லிகனி கொடுத்ததும் இங்கு தான் !!
🔱💠அது விளைந்த இடமும் , இங்கு தான் அங்கவை, சங்கவை திருமணம் நடந்ததும், அகத்தியர் இங்கிருந்துதான் பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், அவரே குறிப்பிடுகிறார் !!
⚜️🌕சிவபெருமான் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும் !!
🔱👁சுலுமுனை சித்தர் குகை, அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது !
⚜️🔱கஞ்சமலைசித்தர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார் !!
⚜️🔱இவர்அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர் !!. இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்கு பிரியமானவர் !!
No comments:
Post a Comment