Thursday, July 30, 2020

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

🌹🕉️🌹🕉️🌹🕉️🌹
*ஆடி தபசு ஸ்பெஷல் !*
➖➖➖➖➖➖➖
*வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!*

ஒரு வருடம் பழமும், 
ஒரு வருடம் சருகும், 
ஒரு வருடம் தண்ணீரும், 
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். 

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.

எதுவுமே இங்கு தேவையில்லை. 

ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். 

பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.

இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும், 
இரண்டு நாள் தங்கினால் 
இப்பிறப்பில் செய்த பாவமும், 
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.

ஞாயிறன்று இங்கு சூரியனை 
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். 

திங்களன்று சந்திரனை  நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.

புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். 

வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.

வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர். 

சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்
நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்
பிறரை ஏமாற்றியிருந்தால் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும். 

இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர் நவரத்தினங்களில் வைரமும் ராசிகளில் சிம்மமும் தேவர்கலில் இந்திரனும் மிருகங்களில் கஸ்தூரி பூனையும் இலைகளில் வில்வமும் பாணங்களில் பாசுபதாஸ்திரமும் சக்திகளில் உமாதேவியும் பூக்களில் தாமரையும் குருக்களில் வியாழ பகவானும் முனிவர்களில் அகத்தியரும் பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.

இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு. 

இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும். 

ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும் 

இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.

இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும். 

இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர். 

இத்தலம் எதுவென 
இன்னும் புரியவில்லையா?  

சங்கரனாகிய சிவனும் 
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது. 

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்… 

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.

இத்தலத்திற்கு 
எப்படி செல்வது?

சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. 

ஓம் ஹரி ஹர நமோஸ்துதே🙏
✴️💐✴️💐✴️💐✴️

பஞ்சாங்கம்

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* . 

*🚩🔯பஞ்சாங்கம்🔯🚩*

*ஆடி ~ 16* ~
*{31.07.2020}  வெள்ளிக்கிழமை.*

*1.வருடம் ~ சார்வரி வருடம். { சார்வரி நாம சம்வத்ஸரம்}*

*2.அயனம் ~ தக்ஷிணாயனம்.* 

*3.ருது ~ க்ரீஷ்ம  ருதௌ.*

*4.மாதம் ~ ஆடி ( கடக மாஸம் ).*

*5.பக்ஷம் ~ சுக்ல  பக்ஷம்.*

*6.திதி ~ துவாதசி .*
*ஸ்ரார்த்த திதி ~ துவாதசி.*

*7.நாள்    வெள்ளிக்கிழமை ~ {ப்ருஹு வாஸரம்)}* ~~~~~         

 *8.நக்ஷத்திரம் - கேட்டை காலை 08.52 AM வரை. பிறகு மூலம்.*

*யோகம் ~ காலை 08.52 AM வரை  சரி இல்லை. பிறகு அமிர்த யோகம்.*

*கரணம் ~ பவம், பாலவம்.*

*நல்ல நேரம் ~ காலை  09.15 AM ~ 10.15 AM  & 01.45 PM ~ 02.45 PM.*

*ராகு காலம் ~  காலை 10.30 AM ~ 12.00 NOON.*

*எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~  04.30  PM*.

*குளிகை ~ காலை 07.30~ 09.00 AM*. 

*சூரிய உதயம்  ~ காலை 06.02 AM*.

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.33 PM.*

*சந்திராஷ்டமம். ~ கார்திகை .*. 

*சூலம் ~  மேற்கு.                      பரிகாரம் ~ வெல்லம்* 

*இன்று - வர லக்ஷ்மி விரதம்.*🙏🙏             
                                                                                
*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*🚩🔯PANCHAANGAM🔯🚩*

*AADI ~ 16* 
 (31.07.2020) FRIDAY*.

*1.YEAR ~ SAARAVARI VARUDAM {SAARVARI NAMA VATHSARAM}.*
*2.AYANAM  ~ DHAKSHINAAYANAM*.
*3.RUTHU ~ GREESHMA RUTHU.*
*4.MONTH ~ AADI.{ KADAKA MAASAM}.*
*5.PAKSHAM ~ SUKLA PAKSHAM.*
*6.THITHI ~ DUVADHASI*
*SRAARTHTHA THITHI ~ DUVADHASI*
*7.DAY ~ FRIDAY( BRUHU VASARAM).*
*8.NAKSHATRAM ~ KETTAI  UPTO 08.52. AM. AFTERWARDS MOOLAM*   

*YOGAM ~ NOT GOOD UPTO O8.52 AM. AFTERWARDS  AMIRIDHA  YOGAM.*
*KARANAM ~ BHAVAM, BAALAVAM.*
*RAGU KALAM .~10.30 AM~12.00 NOON*.
*YEMAGANDAM ~03.00 ~ 04.30 PM*.
*KULIGAI  : 07.30 ~ 09.00 AM*.
*GOOD TIME ~ 09.15 AM ~ 10.15 AM   &  01.45  PM ~ 02.45 PM* . 
*SUN RISE   ~ 06.02. AM*.
*SUNSET ~ 06.33 PM*.
*CHANDRAASHTAMAM ~ KAARTHIGAI*
*SOOLAM  ~ WEST*.
*PARIGARAM*~ *JAGGERY.*
*TODAY ~ VARALAKSHMI VIRATHAM. .*🙏                                

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

எல்லாம் விதியின்படிதான் நடக்கும்

*🌹💫எல்லாம் விதியின்படிதான் நடக்கும்*🌹💫

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

ஒரு நாள்.... "எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான். 

“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”

மனிதன் :  !!!!  ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!

எமதர்மன் சொன்னான் : ” நல்லது, இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..”

மனிதன்: ” சரி, நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம்”.

எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம்!

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான், குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான்.

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன்....

அந்த மனிதனிடம் சொன்னான்.  “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய்,  அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன். 

மனிதன் :  ஆஹா என்ன அது?!

அது என்னவென்றால்.... பட்டியலின் மேலிருந்து இல்லாமல்,  பட்டியலின் கீழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான்.

கதையின் நீதி :  எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.

நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட...😎

வாழ்வினிது 
சிந்தித்துசெயலாற்றுங்கள்...வாழ்த்துக்கள்

வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் !


வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் !

லக்ஷ்மி கடாக்ஷம் பெருக சில யோசனைகள்

• அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று
பெயர். 

அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். 

இப்படி செய்வது  ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். 

அந்த நேரத்தில் தேவர்களும் , முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் . அவர்கள் சந்தோஷப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

• அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

• அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது , தன் வலது உள்ளங்கையையாவது முதலில் பார்த்து விட வேண்டும்.

• செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி
திருமகளை வழிப்பட வேண்டும்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,
சந்தோசமும் பெருகும்.

• ஒவ்வொரு பௌர்ணமி  அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

• வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
கிடைக்கும். 

ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. 

தன காலத்திருக்குப் பின்னரே
அவர்களுக்குச் சேர வேண்டும், முடிந்தால் அவர்களுக்கு புதியதாக
வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில .........

• ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில்
நின்று கொடுக்க கூடாது . 

கொடுப்பவரும் , வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .

• வாசற்படி, அம்மி,ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

• இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது .

• வெற்றிலை  வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது
வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

• சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

• குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும்
அணைக்ககூடாது . புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

• வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும்
கூறக்கூடாது

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது

• துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

• உப்பைத் தரையில் சிந்தக் கூடாது .

• ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். 

அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. 

அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.

ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

• வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். 

விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். 

நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. 

லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. 

நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். 

எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.  நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

• சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு,
யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு
மிகவும் பிடித்தவை.

• தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

• பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி

•வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

• செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள்
வளர்க்கலாம்.

• சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

• காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

• தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. 

விளக்கை அமர்த்துதல் அல்லது ம

லையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.

 ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

• வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

• மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

• ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை
செய்யுங்கள்.

• எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. 

எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

• எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில்
பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். 

அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,
சந்தோஷமும் பெருகும்.

• எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. 

இந்தப்
பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.

• சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில்
மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

• தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

• குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. 

கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை
உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். 

இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

• அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.

கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். 

கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

• பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

• அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

• வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

• இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

• வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்
கூடாது.

• மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக்
கூடாது.

• விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக்
கொடுக்கக் கூடாது.

• விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

• கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில்கோலம்
இடுவது அவசியம்.பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின்டோர்
வாசலில் கோலம் வரையலாம்.

• வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

• பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. 

ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவேண்டும்.

• வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, 

வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. 

சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. 

பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

•அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது. நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

• பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

• சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.

• ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

• தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.

• பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி
படங்கள் மீது விழக்கூடாது

• தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்து விடுகிறாள்.

இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

அலைமகள் சரணம் !

அஷ்டதிக் பாலகர்கள் யார்?

ஓம் நமோ நாராயணாய 🙏🏻🙏🏻
ஓம் அஷ்டதிக் பாலக தேவதாப்யோ நம.

அஷ்டதிக் பாலகர்கள் யார்? 

இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...?

அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். 

எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, ‘அஷ்டதிக்கு பாலகர்கள்’, ‘எண்திசை நாயகர்கள்’ என்று  அழைக்கிறோம்.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். 

இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே 

இந்திரன், 
அக்னி தேவன், 
எமன், 
நிர்ருதி, 
வருண தேவன், 
வாயு தேவன், 
குபேரன், 
ஈசானன் 
ஆகிய எட்டு பேர் விளங்குகின்றனர்.

நம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் இருந்து, நாம் செய்யும் எல்லா செயல்களையும் கவனித்து, அதற்கு சாட்சியாகவும் இருக்கும் திசைநாயகர்களே,அஷ்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

எண் திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பவர்களும் அவர்களே.

இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.  

வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானவர்களாக சிறப்பித்து சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அஷ்டதிக் பாலகர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்திரன்: 

கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், இந்திரன். இவரே தேவர்கள் அனைவருக்கும் தலைவராக உள்ளார். இவரது மனைவி இந்திராணி. இவரே  அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவராகவும் இருக்கிறார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
 
அக்னி தேவன்: 

தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர். வேள்வியின்போது இடப்படும், நைவேத்தியப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் சுவாகா தேவி. இவரை வழிபாடு செய்தால் தேக வனப்பு மற்றும் தேக பலம், மனஅமைதி,  குடும்ப மேன்மை கிடைக்கும்.
 
எமன்: 

தெற்கு திசையின் காவலராக இருப்பவர் எமதர்மன். இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். சூரிய பகவான்  மகனான இவர், தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவராக கருதப்படுகிறார். இவரது மனைவியின் பெயர் குபேர ஜாயை. இவரை வழிபாடு செய்தால் நம்மை  அண்டியிருக்கும் தீவினைகள் அனைத்தும் நீங்கி நல்வழி பிறக்கும்.
 
வருண பகவான்: 

மேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன். இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள். இவரது மனைவியின் பெயர் வாருணி.  இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும்.
 
நிருதி: 

தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி தேவனின், மனைவி பெயர் கட்கி. இவரை வழிபாடு செய்தால், எதிரிகளின் பயம் நீங்கும். வீரம் பிறக்கும்.
 
வாயு பகவான்: 

வடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான். சிரஞ்சீவியும், இவரது மனைவியின் பெயர் வாயு ஜாயை.இவரை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தி கூடும்.
 
குபேரன்: 

வடக்கு திசையின் அதிபதியானவர் குபேரன். இவர் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். இவரது மனைவியின் பெயர் யட்சி என்பதாகும். இவரை  வழிபாடு செய்வதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
 
ஈசானன்: 

வடகிழக்குத் திசையின் அதிபதியான ஈசானன், மங்கலத்தின் வடிவமாக பாவிக்கப்படுகிறார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது  குறிப்பிடத்தக்கது. ஈசானனின் மனைவி பெயர் ஈசான ஜாயை. இவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஞானத்தைப் பெற முடியும்.
அஷ்டதிக் பாலகர்களின் காயத்ரி மந்திரங்கள்:-

1.இந்திர காயத்ரி மந்திரம்:

ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே 
வஜ்ர ஹஸ்தாய தீமஹி 
தந்நோ இந்திர ப்ரசோதயாத்.

2.அக்னி காயத்ரி மந்திரம்:

ஓம் மஹா ஜவாலாய வித்மஹே 
அக்னி தேவாய தீமஹி 
தந்நோ அக்னி ப்ரசோதயாத்.

3.யம காயத்ரி மந்திரம்:

ஓம் சூர்ய புத்ராய வித்மஹே
தண்ட தராய தீமஹி 
தந்நோ யம ப்ரசோதயாத்.

4.நிர்ருதி காயத்ரி மந்திரம்:

ஓம் நிசாசராய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி 
தந்நோ நிர்ருதி ப்ரசோதயாத்

5.வருண காயத்ரி மந்திரம்:

ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலபுருஷாய தீமஹி 
தந்நோ வருண ப்ரசோதயாத்.

6.வாயு காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே 
பூலோக சஞ்சாரய தீமஹி 
தந்நோ வாயு ப்ரசோதயாத்.

7.குபேர காயத்ரி மந்திரம்:

ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி 
தந்நோ குபேர ப்ரசோதயாத்.

8.ஈசான்ய காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே 
சிவ ரூபாய தீமஹி 
தந்நோ ரூத்ர ப்ரசோதயாத்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

நாக_தோஷ_பரிகாரம்_பற்றிய_50_சிறப்பு_தகவல்கள்

 Chairmadurai:
#நாக_தோஷ_பரிகாரம்_பற்றிய_50_சிறப்பு_தகவல்கள்

ராகு, கேது தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.

1. “கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம்.

2. ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.

3. கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை சுவடிகளிலும் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

4. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.

5. நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில் நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதில் உண்மை இல்லை.

6. ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதி மூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.

7. நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.

8. பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.

9. பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.

10. புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.

11. கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும்.

12. ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.

13. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

14. நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

15. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும்.

16. ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.

17. தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.

18. கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

19. இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அ

டியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.

20. கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும். 

21. சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

22. குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும். 

23. வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

24. ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.

25. கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

26. ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.

27. ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந் தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

28. பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வரஞ வேண்டும்.

29. ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.

30. ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்கு பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.

31. துர்க்கா சூக்த மந்திரங்களை ஜபித்து ஹோமங்களில் அருகு, மந்தாரை போன்ற மலர்களையும், உளுந்து போன்ற கருநிற தானியங்களையும், புளிப்பு பண்டங்களையும் ஆஹ¨தி செய்தால் வாழ்க்கையில் பகைவர்களை நிர்மூலமாக்குகிற பராக்கிரமம் ஜாதகருக்கு ஏற்படுகிறது.

32. ராகு, கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து, உளுந்து தானியம் ஏற்றி, வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் அருகில்) பெரிய காஞ்சீபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களை போக்குகிறார்.

33. ராகு ஜாதகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தனி பரிகாரங்கள் இருந்தாலும் ராகு தோஷத்தால் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடு வருமாறு:-

34. தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

35. தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

36. துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

37. நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

38. ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

39. கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.
40. வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும்.

41. கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

42. குமரி மாவட்டத்தில் இருக்கிறது நாகர்கோவில். இங்குள்ள நாகர் ஸ்தலத்தில் நாக வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

43. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தை சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்

கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

44. கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும்.

45. கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

46. கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்கு செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

47. மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

48. கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒருமுறை கூறி வரலாம்.

49. கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. 

50. சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.
#வாழ்கவளமுடன்

கருட_புராணம்_ஓர் அறிமுகம்...!!

#கருட_புராணம் : 
#நமக்கு_எடுத்துரைப்பது

 என்ன?... ஏன் படிக்க வேண்டும்?...

#கருட_புராணம்_ஓர் #அறிமுகம்...!!

பிறக்கின்ற அனைத்து பிறவிகளிலும் துன்பங்களை அனுபவிக்காமல் சில பிறவிகள் இன்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்ற காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, பலவிதமான தகவல்களையும் நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட அந்த பயணத்தின் விளைவாக பரம்பொருளின் அருளோடும், நமக்கு இந்த பூமியில் வாழ்வது எப்படி? என்றும், தவறான செயல்களில் ஈடுபடுவதால் நமக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்றும் விரிவாக எடுத்துரைக்கும் பொருட்டு கருடரின் உதவியோடு கருட புராணம் பலவிதமான ரகசியங்களையும் எடுத்துரைக்கின்றது.

#கருட_புராணம் என்பது பூமியில் பிறந்து, ஆன்மாவுடன் உடலும் இணைந்து இருக்கும் பொழுது நாம் எவ்விதம் வாழ வேண்டும்? என்றும், அவ்விதமாக வாழும்போது நாம் செய்த கர்மாக்களின் அடிப்படையில் உடலை இழந்த ஆன்மா அனுபவிக்கக்கூடிய இன்ப, துன்பங்களை பற்றி எடுத்துரைக்கும் ஒரு வாழ்க்கை சாஸ்திரமாகும்.

#கருட_புராணத்தை படிப்பதன் மூலமாகவோ அல்லது ஒருவர் வாசிக்க இன்னொருவர் கேட்பதன் மூலமாகவோ இந்த பூமியில் நாம் எப்படி வாழ வேண்டும்? என்பதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இயலும். நாம் செய்யும் சிறு செயல்கள் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதையும் இந்த புராணம் நமக்கு எடுத்துரைக்கும்.

நமது பெற்றோர்களுக்கு நாம் எவ்விதம் சில கடமைகளை செய்ய வேண்டும்? என்றும், அந்த கடமைகளை செய்ய தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பற்றியும், நாம் முழுமையாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கக்கூடிய புராணம் கருட புராணம் ஆகும்.

இந்த பூமியில் வாழும் வரை நம்மால் முடிந்த அளவு எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருட புராணத்தை பற்றி அறிந்து கொள்ள நமது முதல் அடியை எடுத்து வைப்போம்.

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...